தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி ட்ரீட்டாக வெளியான படம் பிகில். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம், வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தது. பெண்கள் கால்பந்தாட்ட அணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில், அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் விஜய் அசத்தியிருந்தார். 

என்ன தான் அட்லி பல படங்களை காப்பியடித்து பிகில் கதையை உருவாக்கியதாக விமர்சனங்கள் எழுந்தாலும், கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பிகில் படம் பிடித்திருந்தது. ஆனால் அதை சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் முறியடித்துள்ளது. 

அதாவது, பிகில் சென்னையில் ரூ 13.7 கோடி வரை வசூல் செய்திருந்தது, அந்த வசூலை கடந்த 9ம் தேதி வெளியான தர்பார் திரைப்படம் 12 நாட்களில் தட்டித் தூக்கியுள்ளது. ஆம், தர்பார் 12 நாட்களில் ரூ 13.8 கோடிகளுக்கு மேல் சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது.இதன் மூலம் ஆல் டைம் டாப் 5 சென்னை பாக்ஸ் ஆபிஸில் தர்பார் 5வது இடத்தை பிடித்துள்ளது. 2.0, பாகுபலி2, பேட்ட, சர்கார் ஆகிய படங்கள் முதல் 4 இடங்களில் உள்ளன.