ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கல் விருந்தாக "தர்பார்" திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

இதையும் படிங்க: ரஜினியின் தர்பாரை ரசிகர்களுடன் கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் பேமிலி... ரோகிணி தியேட்டரில் மாஸ் காட்டுறாங்க...!

முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக தியேட்டர் வாசல்களில் குவிந்துள்ள ரஜினி ரசிகர்கள்  பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் மாஸ் காட்டினர். சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் சூப்பர் ஸ்டார் குடும்பத்தினர், ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை கண்டு ரசித்தனர். 

அதிகாலை 4 மணியில் இருந்தே "தர்பார்" படத்தை பார்த்து ரசித்து வரும் ரஜினி ரசிகர்கள், டுவிட்டரில் செம்ம பாசிட்டீவ்வான கமெண்ட்ஸ்களை தட்டிவிட்டுள்ளனர். தர்பார் படத்தின் பர்ஸ்ட் ஆப் சீன் மரண மாஸ் காட்டியுள்ளதாக புகழ்ந்து வருகின்றனர். 

அனைத்து சீன்களும் தீயாக இருப்பதாகவும், சூப்பர் ஸ்டார் - நயன்தாரா காதல் காட்சிகள் செம்ம என்றும், யோகிபாபு காமெடி வேற லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அனிருத்தின் மியூசிக்கைப் பற்றி குறிப்பிடவும் சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ் மறக்கவே இல்லை. ரஜினியின் ஒப்பனிங் சாங்கான சும்மா கிழி பாடல், ஐயப்பன் பாடலின் காப்பி என கழுவி ஊத்திய காயங்களுக்கு மருந்து போடும் விதமாக, இதுக்கு மேல கெத்தா எவராலும் பிஜிஎம் போட முடியாது என கமெண்ட்ஸ் தெறிக்கிறது. 

ஏ.ஆர்.முருகதாஸுன் திரைக்கதை வேற லெவலில் இருப்பதாகவும், சூப்பர் ஸ்டார் "தர்பார்" படத்தில் சுறுசுறுப்பாக நடித்திருப்பதாகவும் சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ் கெத்து காட்டியிருக்கின்றனர்.