ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கல் விருந்தாக "தர்பார்" திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியுள்ள "தர்பார்" படத்திற்கு, தமிழக அரசு 4 நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் கலக்க உள்ள "தர்பார்" படத்தை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் பட்டாளம் தியேட்டர் வாசல்களில் குவிய ஆரம்பித்துவிட்டது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை என அனைத்து மாவட்டங்களிலும் "தர்பார்" படத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனிடையே, சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் மகன்கள் ஆகியோர் "தர்பார்" படத்தை கண்டு ரசித்தனர். 

இவர்களுடன் "தர்பார்" படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும், நடிகரும், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸும் ரசிகர்களின் ஆராவாரத்துடன் "தர்பார்" படத்தை பார்த்து என்ஜாய் செய்தனர்.