சென்னையில் நடைபெற்ற அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவன விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திவ்யா சத்யராஜ், தவெக தலைவர் விஜய்யை தாக்கி பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

Divya Sathyaraj Speech : நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா திமுகவில் இணைந்த பின்னர் தொடர்ச்சியாக பல மேடைகளில் விஜய்யையும், அவரது தமிழக வெற்றிக் கழகத்தையும் விமர்சித்து பேசி வருகிறார். சென்னையில் நடைபெற்ற அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவன விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திவ்யா சத்யராஜ், அதில் கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி தவெக தலைவர் விஜய்யை கடுமையாக சாடி பேசி இருக்கிறார். எவன் செத்தா எனக்கென்ன என விஜய் இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் விமர்சித்து இருக்கிறார்.

திவ்யா சத்யராஜ் பேசியதாவது : “நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் அருமையான தலைவர். ஏனென்றால், மேடையில் நின்று, பாட்டுபாடுபவர் தலைவர் கிடையாது. மக்களுக்காக பாடுபவர் தான் தலைவர். திரையில் வந்து டான்ஸ் ஆடுபவர் தலைவர் கிடையாது. தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர். எவன் செத்தா எனக்கென்ன என படையப்பாவில் வரும் ரம்யாகிருஷ்ணன் மேடம் மாதிரி ஆபிஸ் ரூமில் உட்கார்துகொண்டு லாஜிக்கே இல்லாம ஸ்லோ மோஷன்ல பேசுறவர் தலைவர் கிடையாது. துபாய் பயணத்தை கேன்சல் பண்ணிட்டு மக்களுக்காக ஓடி வந்தாரு பாருங்க அவர் தான் உண்மையான தலைவர்.

லாஜிக்கே இல்லாம பேசுகிறார்கள் - திவ்யா சத்யராஜ் பதிலடி

இந்த கரூர் சம்பவத்தை பத்தி, லாஜிக்கே இல்லாம புதுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் சில கேள்வி கேட்டார்கள். ஏன் செந்தில் பாலாஜி அண்ணா உடனே வந்தாருனு கேட்டாங்க. அவர் உடனே வந்தது அவருடைய செயல்திறனை காட்டுகிறது. ஏன் அன்பில் மகேஷ் அண்ணா அழுதாருனு கேட்குறாங்க. எங்க அன்பில் மகேஷ் அண்ணா அழுதது, அவருக்கு மக்கள் மேலே இருக்கும் கருணையை காட்டுகிறது. ஏன் ஜோதிமணி மேடம் ஓடி வந்தாங்கனு கேட்டாங்க. ஜோதிமணி மேடம் ஓடி வந்தது அவங்களுக்கு மக்கள் மீது உள்ள கருணையை காமிக்குது.

சும்மா லாஜிக்கே இல்லாம, நீங்க பர்மிஷன் கொடுக்கவில்லைனு சொல்றீங்க. எல்லாமே எங்களை கேட்டா செய்கிறீர்கள். நாங்க பிரின்சிபல், நீங்க எல்.கே.ஜி ஸ்டூடண்டா... எல்லாமே எங்க பர்மிஷனோட தான் நீங்க பண்றீங்களா... அதனால கொஞ்சம் லாஜிக்கோடு பேச வேண்டும். காவல்துறை எதுக்கு இருக்காங்க, அவங்களோட வேலை நம்மை பாதுகாப்பது. அவங்க மீது பால் வீசுவது, மரத்து மேல ஏறுவது, காவல்துறையை கடிச்சு வைக்குறது, இதையெல்லாம் ஒரு தலைவர் கண்ட்ரோல் பண்ணனுமா... வேண்டாமா? என விஜயை தாக்கி பேசி இருக்கிறார் திவ்யா சத்யராஜ்.