ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று ரிலீஸாகியுள்ளது. இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில், 70 வயதிலும் எக் லுக்கில், ஸ்டைலாக நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார். உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கீரின்களில் திரையிடப்பட்டுள்ள "தர்பார்" படத்தை ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். 

ரஜினி படத்தின் டிரெய்லர் வெளியான போதே அரசியல் ரீதியான வசனங்கள் ஏதேனும் உள்ளதா என்று அனைவரும் காத்திருந்தனர். இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை சீண்டுவது போன்ற டைலாக் "தர்பார்" படத்தில் இடம் பெற்றுள்ளது. 

கர்நாடகா சிறையில் உள்ள சசிகலா அவ்வப்போது ஷாப்பிங் செல்வதாக புகார் எழுந்தது. அது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை கிளப்பின.

இதனிடையே "தர்பார்" படத்தில் காசு இருந்தால் ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. சவுத் இந்தியாவுல கூட கைதி அடிக்கடி ஜெயில்ல இருந்து வெளியே போய் ஷாப்பிங் செய்ததாக செய்தி பார்த்தேன் என சக காவல் அதிகாரி ரஜினியிடம் கூற, அதற்கு அவர் ஓ... என கூறுவது போன்ற வசனம் உள்ளது.