டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
Prajin Evicted From Bigg Boss Tamil Season 9 : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படி வெளியேற்றப்படும் போட்டியாளர் யார் என்று பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9
விஜய் டிவியில் இன்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடுவராக இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் வார இறுதியில் ஹவுஸ் மேட்ஸ் ஒருவரில் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார். அப்படி இந்த வாரம் வரையில் ஆறு ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அப்படி வெளியேற்றப்படும் போட்டியாளர் யாராக இருக்கும் என்று பார்ப்போம்.
விஜய் சேதுபதி பிக் பாஸ் - இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் பிரஜன் என்பதை instagram பக்கத்தில் அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர் அதைக் கேட்டு ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை எழுந்துள்ளது. அவர் இப்போது தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அவர் மட்டுமின்றி அவரது மனைவியும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகவும் அதிரடியாகவும் சண்டை போர்க்களமாகவும் இருந்தன.
பிரஜன்
ரசிகர்களிடம் பார்ப்பதற்கே மிகவும் ஐயையோ என்ன இப்படி இருக்கிறது என்ற நிலைமையிலும் பார்ப்பதற்கே கடுப்பாக இருந்தது. இந்த வாரம் தான் சூடு பிடித்தது பிக் பாஸ். இந்த வாரம் பிக்பாஸே டென்ஷன் ஆகிவிட்டார் என்று தான் கூற வேண்டும். ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் டாஸ்கை ஒழுங்காக செய்யவில்லை என்பதாலும் அனைவரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதாலும் பிக் பாஸ் மிகவும் கோபமடைந்தார். ஏன் இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க வீட்டில் கத்திகிட்டே இருக்கீங்க என்றெல்லாம் சாடினார். "உங்கள பார்ப்பதற்கு தானே நான் சோறு தண்ணி இல்லாம இங்க உக்காந்து உங்கள பாத்துட்டு இருக்கேன் நீங்க எப்படி சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்களே" என்றெல்லாம் பிக் பாஸ் கூறினார்.
பிரஜனின் இந்த வார விளையாட்டு:
வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார் பிரஜன். இவருக்கு கொடுத்த போலீஸ் என்னும் தேசத்தில் பிரஜன் சற்று குறைவாகவே விளையாட்டை விளையாடினார். பிரஜன் கடந்த வாரத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி திரும்பவும் வீட்டுக்குள் வரும் சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது. கடைசி விளிம்பில் தான் இருந்தார் பிரஜன். ஆனால் திரும்பவும் வீட்டுக்குள் வந்தடைந்தார். இந்த வாரத்தில் நெக்லஸை தூக்கும் டாஸ்க் ஒவ்வொரு கேரக்டராக இருந்து வந்த நிலையில் அவர் தனது கேரக்டரை விட்டு நெக்லஸை மட்டும் தூக்க வேண்டும் என்பதே அவர் ஒரு வேலையாகவே இருந்தது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வெளியேறும் போட்டியாளர்
அதனால் அடுத்தவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். அந்த நெக்லஸை தூக்கி பிக்பாஸ் செட்டின் மீது எறிந்தார் அதன் மூலம் அந்த நெக்லஸ் என்பது வெற்றி என்பதை குறித்தாலும் அவர் கொஞ்சம் குறைவாகவே இந்த கேரக்டரை விளையாடினார். அது ரசிகர்களிடம் சர்ச்சையையும் விஜய் சேதுபதியிடம் விமர்சனங்களையும் பெற்றார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்து கொண்டு இப்படியெல்லாம் விளையாடலாமா என்ற விமர்சனத்திற்கும் உள்ளானார்.
விஜய் சேதுபதியின் பிக் பாஸ் ப்ரோமோ:
தற்போது விஜய் சேதுபதி இந்த வார எவிக்ஷனில் யார் என்பதை அந்த அட்டையை வெளியிடும் ப்ரோமோ வெளியாகி இருந்தது அதில் கடைசி மூன்று நபராக சாண்ட்ரா, எஃப்ஜே, பிரஜன் மூன்று பேரும் இருக்கின்றனர். அதில் ஹவுஸ் மேட்ஸிடம் யார் இந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பதை கேட்கும் மாதிரியாகவும் அதில் பிரஜன் வெளியேறுவார் என்பதை ஹவுஸ் மேட்ஸ் கூறுவது போன்றும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் பிரஜனை இந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்பதே தெரிய வருகிறது. எனினும், பிக் பாஸைப் பொறுத்த வரையில் பல டுவிஸ்டுகள் இருக்கும். அதன்படி இந்த வாரம் அவர் யாரை வெளியேற்ற போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.