- Home
- Cinema
- ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
Vijay Tv Siragadikka Aasai Serial Update: சிறகடிக்க ஆசை சீரியலின், சமீபத்திய புரோமோவில் ரோகிணி தனக்குள் கல்யாணியின் ஆவி புகுந்து விட்டதாக கூறுவது, சீரியல் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

சிறகடிக்க ஆசை தொடர்:
தமிழக மக்களின் ஏகபோக ஆதரவுடன், விஜய் டிவியில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சீரியல், சிறகடிக்க ஆசை. இந்தத் தொடர், கிராமத்து வெள்ளந்தியான மீனாவுக்கும், முரட்டுக் குணம்கொண்ட முத்துவுக்கும் இடையேயான காதல் போராட்டத்தையும், ஒரு கூட்டுக்குடும்பத்தின் சிக்கல்களையும் யதார்த்தமாகக் காட்டுவதால், மக்கள் இந்த தொடரை அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள்.
உண்மையை மறைக்கும் ரோகிணி:
இதில், பணக்கார வாழ்க்கைக்காக ஆசைப்படும் மருமகள் ரோகிணி மற்றும் அவளுடைய கணவன் மனோஜின் வில்லத்தனங்களும் கதையை விறுவிறுப்பாக்குகின்றன. தற்போது, இந்த சீரியலில் ரோகிணியின் தில்லாலங்கடி வேலைகள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி , ஒரு குழந்தை இருந்த உண்மையை மறைத்து, மனோஜைக் கல்யாணம் செய்துகொண்டாள் ரோகிணி. அந்த உண்மை மீனாவுக்கு தெரியவந்த பிறகு, எல்லோரிடமும் போராடி பல பொய்களை சொல்லி தன்னுடைய மகன் கிரிஷை இந்த வீட்டுக்குள் அழைத்து வந்துவிட்டாள்.
விஜயா செய்த கொடூர செயல்:
கிரிஷ் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும், மனோஜும், அவனுடைய தாய் விஜயாவும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். அவர்கள் இருவருக்கும் கிரிஷ் இங்கு இருப்பது துளிக்கூட பிடிக்கவில்லை. "இப்படியே விட்டால், இவள் மறுபடியும் அவனுடன் சேர்ந்து விடுவாள்," என்று பயந்த விஜயா, ஒரு கொடூரமான முடிவை எடுக்கிறார். விஜயா, தன் தோழி சிந்தாமணியிடம் சொல்லி, எப்படியாவது கிரிஷை கடத்தி, அவனுடைய தொந்தரவு இல்லாமல் ஒரு அனாதை ஆசிரமத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்படி ஏற்பாடு செய்தார். அந்தக் குழந்தை அங்கேயே வளர்ந்துவிட வேண்டும் என்பது அவருடைய திட்டம்.
முறியடிக்கப்பட்டு திட்டம்:
இந்தக் கொடுமையான திட்டத்தைப் பற்றி எப்படியோ அறிந்துகொண்ட மீனா, உடனே தன் கணவன் முத்துவிடம் விஷயத்தைச் கூறி... முத்துவும் மீனாவும் துரிதமாகச் செயல்பட்டு, விஜயா அமைத்திருந்த சதி வலையிலிருந்து கிரிஷை சாமர்த்தியமாகக் காப்பாற்றுகிறார்கள். அவர்கள் இருவரும் செய்த இந்த வீரச் செயல், அந்தக் கூட்டுக்குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று மனோஜ் சத்தியம் செய்தாலும், அவனை தன் மகனாக ஏற்க வைக்க ரோகிணி படும் பாடு பெரும் சோகம்.
ரோகிணி அரங்கேற்றும் நாடகம்:
இந்த கிரிஷ் விஷயத்தில், மனோஜின் மனதை மாற்றுவது எப்படி என்று தெரியாமல் ரோகிணி பெரும் குழப்பத்தில் இருக்கிறாள். கிரிஷை மனோஜுடன் நெருங்கிப் பழக வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. இப்படியே விட்டால் வேலைக்காகாது என்று நினைத்த ரோகிணி, ஒரு புதிய, யாரும் எதிர்பாராத நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்கிறாள்.
கல்யாணியின் ஆவி ரோகிணிக்குள்:
அதன்படி கிரிஷின் உண்மையான அம்மா, அதாவது, ரோகிணியின் முன்னாள் கணவன் கிரிஷின் முதல் மனைவி கல்யாணி ஒரு விபத்தில் இறந்துபோனார். இப்போது, இறந்துபோன அந்தக் கல்யாணியின் ஆவி தன் உடலுக்குள் புகுந்துவிட்டது என்பதுபோல நடிக்கத் தொடங்கினாள் ரோகிணி. அவள் கல்யாணி போலவே பேசுவதும், நடப்பதும், சில சமயங்களில் பயங்கரமாக நடந்து கொள்வதுமாக இருக்கிறாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மனோஜ், இப்போது பயத்தில் நடுங்கிக் கிடக்கிறான். "ரோகிணிக்கு என்ன ஆகிவிட்டது? இவள் ஏன் இப்படி மாறிவிட்டாள்?" என்று குழம்பிப் போயிருக்கிறான். ரோகிணி கிரிஷிடம் தன்மையாகவும், பாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
மாற்றம் நேருமா?
மேலும் ரோகிணியின் இந்த வினோதமான நாடகம், மனோஜின் மனதில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும்? தாயின் ஆவி வந்துவிட்டது என்று நினைத்து, அவன் கிரிஷை தன் மகனாக ஏற்றுக்கொள்வானா? அல்லது, "இதுவெல்லாம் ரோகிணி ஆடும் நாடகம்!" என்று மனோஜ் உண்மையை கண்டுபிடித்துவிடுவானா? முத்து இந்த ஆவி நாடகத்தின் பின்னணியில் உள்ள உண்மையை விரைவில் கண்டுபிடித்து, ரோகிணியின் புதிய திட்டத்தை முறியடிப்பானா? அல்லது, இந்த ஆவி நாடகம் உண்மையிலேயே மனோஜை கிரிஷுடன் நெருங்கச் செய்துவிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.