ரஜினியின் நெருங்கிய நண்பர்.. விஷ்ணு விஷாலின் முன்னாள் மாமனார் - உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் நடராஜ்!

Director Nataraj Hospitalized : தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து வரும் நடராஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Super Star rajinikanth best friend Actor and Director Natraj hospitalized ans

கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் "மூன்று முடிச்சு" திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் நடராஜ். அதைத் தொடர்ந்து பல சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக பைரவி, பிரியா, ராணுவ வீரன், நான் மகான் அல்ல உள்ளிட்ட திரைப்படங்களில் ரஜினியோடு இணைந்து நடித்து புகழ் பெற்றவர் தான் நடராஜ். 

அதன் பிறகு கடந்த 1984 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தின் மூலம் நடராஜ் அவர்கள் இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கினார். அவர் இறுதியாக இயக்கிய திரைப்படம் 1993 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வள்ளி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

லால் சலாம் படத்தில் அசத்திய விக்ராந்த்.. அதற்குள் வந்த அடுத்த பட வாய்ப்பு - மாஸ் இயக்குனருடன் இணைகிறார்!

தற்பொழுது சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துவரும் நடராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது கொண்ட நட்பின் காரணமாக தனக்கு பிறந்த மகளுக்கு ரஜினி என்று பெயரிட்டார். அவரை திருமணம் செய்து கொண்டது பிரபல நடிகர் விஷ்ணு விஷால் என்பதும் பலர் அறிந்ததே. அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, ரஜினி நடராஜ் அவர்கள் தனது கணவரான விஷ்ணு விஷாலை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். 

Super Star rajinikanth best friend Actor and Director Natraj hospitalized ans

தற்பொழுது சின்னத்திரை நடிகராக புகழ் பெற்று விளங்கிவரும் நடராஜ் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு வலிப்பு நோயின் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், தற்பொழுது ஒரு ஆசிரமத்தில் அவர் சிகிச்சை பெற்று பூரண சுகத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கிடப்பில் வாடிவாசல்.. டாடா காட்டிவிட்டாரா சூர்யா.. மீண்டும் அசுரனிடம் செல்லும் வெற்றி.. பரவும் தகவல் உண்மையா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios