லால் சலாம் படத்தில் அசத்திய விக்ராந்த்.. அதற்குள் வந்த அடுத்த பட வாய்ப்பு - மாஸ் இயக்குனருடன் இணைகிறார்!

Actor Vikranth : பிரபல நடிகர் விக்ராந்த் நடிப்பில் நேற்று வெளியான லால் சலாம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

lal salaam victory actor vikranth joining hands soon with famous kollywood director ans

பிரபல நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான "அழகன்" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் தான் விக்ராந்த். கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.வி உதயகுமார் இயக்கத்தில் வெளியான "கற்க கசடற" என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 

அன்று தொடங்கி இன்று வரை இந்த 18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் அவர் வெறும் 19 திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றளவும் தனக்கு பிரேக் கொடுக்கும் ஒரு நல்ல திரைப்படத்திற்காக அவர் காத்திருக்கின்றார். இந்த சூழ்நிலையில் நேற்று பிப்ரவரி 9ம் தேதி பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "லால் சலாம்" திரைப்படத்தில் அவருடைய மகனாக நடித்த விக்ரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

தீபாவுக்கு எதிராக நடந்த சதி.. ட்விஸ்ட் வைத்த கார்த்திக் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

இந்த சூழலில் பிரபல இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் விக்ராந்த் அவர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான "டைரி" திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இன்னாசி பாண்டியன் தற்பொழுது ராகவா லாரன்ஸ் அவர்களுடைய சகோதரர் நடிக்கும் "புல்லட்" திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் டைரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அருள் நிதியோடு இணைந்து விக்ராந்த் அவர்கள் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்தாலும், விக்ராந்த் அவர்களை நாயகனாக இன்னாசி பாண்டியன் படத்தில் விரைவில் நடிப்பார் என்கின்ற தகவலும் வெளியாகி வருகிறது. பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தோடு இருந்த விக்ராந்திற்கு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வர துவங்கியுள்ளது.

திடீர் நெஞ்சு வலி.. பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி - முழு விவரம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios