கிடப்பில் வாடிவாசல்.. டாடா காட்டிவிட்டாரா சூர்யா.. மீண்டும் அசுரனிடம் செல்லும் வெற்றி.. பரவும் தகவல் உண்மையா?
Vaadivaasal Movie : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாக துவங்கிய திரைப்படம் நான் வாடிவாசல். படத்தின் நாயகனாக நடிக்க பிரபல நடிகர் சூர்யா தேர்வானது அனைவரும் அறிந்ததே.
Suriya
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் "வாடிவாசல்" படத்திற்கான பணிகள் துவங்காமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காளை மாடு ஒன்றை கிராபிக்ஸ் மூலம் உருவாக்க வெற்றிமாறனும் படக் குழுவினரும் லண்டன் சென்று சென்றனர்.
Vetrimaaran
ஆனால் இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறனும், நடிகர் சூர்யாவும் தங்களுடைய வெவ்வேறு படங்களில் பிசியான காரணத்தால் இந்த திரைப்படம் தள்ளிக் கொண்டே போகிறது. தற்பொழுது நடிகர் சூர்யா அவர்கள் பாலிவுட் உலகிற்கு செல்ல உள்ள நிலையில் அவர் வாடிவாசல் திரைப்படத்தை கைவிட்டு உள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
Dhanush
அதேபோல இயக்குனர் வெற்றிமாறன் அவர்களும் விடுதலை படத்தில் இரண்டாம் பாக பணிகளை இன்னும் முடிக்காத நிலையில், அவரும் வாடிவாசல் திரைப்படத்தை பற்றி எந்த தகவலும் வெளியிடாமல் இருக்கின்றார். ஆகவே வாடிவாசல் படத்தை பிரபல நடிகர் தனுஷ் அவர்களை வைத்து இயக்க பணிகள் தற்பொழுது நடந்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் படக்குழு இன்றளவும் வெளியிடவில்லை.
திடீர் நெஞ்சு வலி.. பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி - முழு விவரம்!