''தர்பார்'' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

"அண்ணாத்த" என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் செம்ம எவியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா அல்லது புனே போகலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதி, இந்தியாவின் வடமாநிலங்களை விட்டுவைக்கவில்லை. அதனால் மூன்றாம் கட்ட ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பட்டன் போடாமல் படுகவர்ச்சியாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் அபிராமி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

கிட்டதட்ட 52 நாட்களாக கொரோனா பிரச்சனையால் முடங்கி கிடந்த திரைத்துறை தற்போது தான் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை தொடங்கியுள்ளது. கொரோனா பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் திரைத்துறையினர் பலரும் திண்டாடி வருகின்றனர். சிறிய பட்ஜெட் படங்களையாவது ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்யலாம் என்று பார்த்தால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...!

இந்நிலையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2019ம் ஆண்டு “பேட்ட”, இந்த ஆண்டு “தர்பார்” ஆகிய படங்கள் பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.