டாப் ஸ்டார்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் வலிமை அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.


'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. "அண்ணாத்த" என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் செம்ம எவியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய, மாநில அரசுகள் ஷீட்டிங்கை நடத்த அனுமதி கொடுத்துள்ளன. இதனால் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த பல படங்கள் கேமராவை தூக்கிக்கொண்டு ஷூட்டிங்கிற்கு கிளம்பியாச்சு. 

இதையும் படிங்க: என்னது நடிகர் விஷால் அப்பாவா இது?... 82 வயசிலும் உடம்பை எப்படி கட்டுமஸ்தா வச்சியிருக்கார் பாருங்க....!

டாப் ஸ்டார்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் மாஸ்டர், அஜித்தின் வலிமை அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் அண்ணாத்த பட ஷூட்டிங் குறித்து சூப்பர் தகவல் கசிந்துள்ளது. அதாவது ஐதராபாத்திலேயே அண்ணாத்த பட ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து நடிகர் ரஜினியும் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது.