ஒவ்வொரு முன்னணிஹீரோவின் டீசர், ட்ரெய்லர் வெளியாகும் போதும், அது புதிதாக ஏதாவது சாதனை படைக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் கவனிப்பார்கள். குறிப்பாக அந்த படம் அவர்களது ஹீரோவின், போட்டி ஹீரோ படம் செய்த சாதனையை லேசாக அசைத்து பார்த்தால் கூட, அதுதான் அன்னைக்கு டுவிட்டர் ட்ரெண்டிங்கே. அப்படி சமீபத்தில் அடுத்தடுத்து சாதனைகளை செய்து வரும் படம் "பிகில்".

அட்லீ - விஜய் கூட்டணியில் வெளியான 3வது படமான "பிகில்" வசூல் ரீதியாக பல படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதுமட்டுமின்றி, "பிகில்" படத்தின் ட்ரெய்லர் வெளியான 2 மணி நேரத்திலேயே 1 கோடி பார்வையாளர்களையும், 1 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளையும் குவித்து சாதனை படைத்தது. அதுவே 3வது நாளில் 20 லட்சம் லைக்குகளாக அதிகரித்து, பாலிவுட் கிங்கான் ஷாரூக்கானின் "ஜீரோ" படம் செய்திருந்த சாதனையை முறியடித்தது. 

 

இதையும் படிங்க: "எனக்கு போலீஸ் வேடத்தில் நடிப்பது பிடிக்காது"... "தர்பார்" மேடையில் மனம் திறந்த ரஜினி...!

இந்த சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளையும் சேர்ந்தே "தர்பார்" பட ட்ரெய்லர், இதுவரை 2 கோடி பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல் மூன்று மொழிகளின் லைக்குகளையும் சேர்த்தால் வெறும் 7 லட்சத்தை மட்டுமே கடந்துள்ளது. யூ-டியூப்பில் "தர்பார்" பட ட்ரெய்லரை வெளியிட்டு 21 மணி நேரம் ஆகும் நிலையில், இதுவரை 74 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் சொன்னது நிஜம் தான்பா... செம்ம கிளாமர் லுக்கில் நயன்தாரா... தர்பார் ட்ரெய்லரை கொண்டாடும் நயன் ஃபேன்ஸ்...!

"பிகில்" படத்தின் சாதனையை முறியடிக்க முடியாமல் "தர்பார்" படம் திண்டாடி வருகிறது. எனவே தான் "தர்பார்" படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, ஒட்டுமொத்த எண்ணிக்கைகளை மட்டுமே டுவிட்டரில் பதிவிட்டு வருகிறது. தர்பார் பொங்கலை கொண்டாட ஆசையுடன் காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், ஆரம்பமே இப்படியா என்ற ஆதங்கத்தில் உள்ளனர்.