ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை ரிலீஸ் செய்யப்பட்டது. ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் சுறுசுறுப்பான, ஸ்டைலிஷ் போலீஸ் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமைய்யா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

லைகா புரோடக்‌ஷன் தயாரித்துள்ள அந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைத்துள்ளார். நேற்று மாலை யூ-டியூப்பில் வெளியான "தர்பார்" படத்தின் ட்ரெய்லரை இதுவரை 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். "தர்பார்" ட்ரெய்லரில் சூப்பர்  ஸ்டாரின் ஸ்டைலுக்கு நிகராக, நயன்தாராவின் அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

"தர்பார்" ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறியது போல, வயதாக, வயதாக நயன்தாராவின் அழகும், கிளாமரும் கூடிக்கொண்டே தான் போகிறது. நயன்தாரா இதற்கு முன்பு நடித்த பல படங்களை காட்டிலும், இதில் செம்ம அழகாக உள்ளார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவையிலும், சுடிதாரிலும் வேற லெவலில் மாஸ் காட்டியிருக்கும் நயனை, அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். 

 

அசத்தல் அழகில் மனதை கொள்ளை கொண்ட நயன்தாராவை பேரழகு பெட்டகம் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரியே வயசு ஆக, ஆக நயனின் அழகு மெருகேறிக்கொண்டே செல்வதாக நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளனர். 

 

சூப்பர் ஸ்டாருக்கு சும்மா கிழின்னா, நயன்தாராவிற்கு சும்மா தெறி என தர்பார் படத்தில் நயனை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.