அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ
செல்வமணி இயக்கத்தில் பசுபதி, வித்தார்த், லட்சுமி பிரியா நடிப்பில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் குற்றம் புரிந்தவன் என்கிற தமிழ் வெப் தொடரின் விமர்சனத்தை பார்க்கலாம்.

குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ் கதை என்ன?
பசுபதி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணி புரிகிறார்; தனது மனைவி மற்றும் பேரனுடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அத்தோடு ஊரில் கஷ்டப்படும் சிலருக்கு அவ்வப்போது மருத்துவ உதவிகளையும் செய்து வருபவர். திருவிழா நேரத்தில், அவரின் குடியிருப்பின் அருகில் வசிக்கும் சால்மன் என்னும் நபர் தலையில் காயத்துடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது, பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறது. மேலும், அவரின் 12 வயது மகள் மெர்சி காணாமல் போவதும் இந்த வழக்கை விசாரிக்க காவல்துறை வருவதற்கான காரணமாகிறது. சால்மனை கொன்றது யார்? சிறுமி மெர்சிக்கு என்ன நடந்தது? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து விடை சொல்லுகிறது இந்த குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்.
குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ் விமர்சனம்
பசுபதி தான் சீரிஸை தன் தோளில் சுமக்கிறார். அவர் நடிப்பு பர்ஸ்ட் கிளாஸ் ஆக உள்ளது. விதார்த்துக்கு ஆரம்பத்தில் பெருசா ஏதும் முக்கியத்துவம் இல்லாத மாதிரி தெரிஞ்சாலும், கடைசி 3 எபிசோடுகள் பின்னி பெடலெடுத்திருக்கிறார். லட்சுமி பிரியா, பசுபதி மனைவி உட்பட எல்லோரும் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள். பின்னணி இசை இன்னும் கொஞ்சம் பரபரப்பைக் கூட்டியிருக்கலாமோ என தோன்ற வைத்திருக்கிறது.
ப்ளஸ் - மைனஸ் என்ன?
முதல் எபிசோடில் நேரடியா கதைக்கு வரும், திரைக்கதை அடுத்தடுத்து டிவிஸ்ட்டுகளை அடுக்கி இரண்டாவது எபிசோட் எண்டிங் வரை ஆச்சரிய பட வைக்கிறது. 3, 4 எபிசோடுகள் மட்டும் கொஞ்சம் சறுக்கல். ஒரே இடத்தில் ஒரே விஷயத்தை நமக்கு கடத்த அங்கேயே சுத்துவது கொஞ்சம் போர். 5 வது எபிசோடில் மீண்டும் வேகமெடுக்கிறது கதை. அதன்பிறகு வருவதெல்லாம் யாரும் யூகிக்க முடியாத டிவிஸ்டா தான் இருக்கும். அதை கடைசி வரை கொண்டு போன விதத்தில் ரைட்டிங் செம்ம.
குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ் ரிவ்யூ
குறிப்பா நம்மையே இதுவா, அதுவா-ன்னு போட்டு குழப்பியடிக்க வைத்து அதற்கு நேரெதிரா வேற ஒன்னை வச்சது தான் சீரிஸ்-க்கு ப்ளஸ். 6, 7 வது எபிசோட்லாம் டிவிஸ்ட் அடுக்கி வச்சுருக்காங்க. அது எதுவுமே உங்களுக்கு திகட்டாது. அடடா என யோசிக்க வைக்கும். சில கேள்விகளும், லாஜிக் பாக்கனும்னும் லைட்டா தோனும், ஆனா அதெல்லாம் பெருசா கண்டுக்க விடாம இயக்குநர் செல்வமணியின் திரைக்கதை நம்மை கட்டிப்போடுகிறது. மற்ற கேரக்டர்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமா குடுத்திருக்கலாம்.
பெரும்பாலும் பசுபதியை மட்டுமே சுத்துற கதை மற்ற பக்கமும் விரிஞ்சுருக்கலாம். விதார்த், லட்சுமி பிரியாக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் குடுத்துருக்கலாம். வில்லனுக்கு இன்னும் கொஞ்சம் பில்டப் குடுத்துருக்கலாம். மற்றபடி பெருசா எந்த குறையும் இல்லாத ஒரு சீரிஸ் ஆக இந்த குற்றம் புரிந்தவன் உள்ளது. திரில்லர் ரசிகர்களுக்கு இது நல்ல விருந்து தான். மிஸ் பண்ணாம பாருங்க.

