- Home
- Cinema
- தொலைக்காட்சி
- துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்ல விசாலாட்சியை அணுகி இருக்கிறது போலீஸ் அதிகாரி கொற்றவை டீம். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரனை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நேற்று போலீஸ் செக் போஸ்டிலும் ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆனார் குணசேகரன். இதையடுத்து தன்னுடைய தம்பிகளுடன் பாண்டிச்சேரிக்கு சென்று அங்கு தன்னுடைய நண்பனின் பண்ணைவீட்டில் தங்கி இருக்கிறார். மறுபுறம் சக்தியும் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். சக்தியை பார்த்ததும் கண்ணீர் சிந்திய விசாலாட்சி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சக்தியிடம் மன்னிப்பு கேட்ட விசாலாட்சி
சக்தியிடம் உங்க அண்ணன் பண்ணுனது எல்லாம் எனக்கு தெரியாதுடா... தெரிஞ்சா இப்படி செய்ய விட்டிருப்பேனா என ஃபீல் பண்ணி பேசும் விசாலாட்சி, இதையடுத்து சக்தியை ரூமுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுக்கிறார். அப்போது, சக்தியிடம், நீ காணாமல் போனபோது சாமியிடம் நிறைய வேண்டிகிட்டு இருந்ததாகவும், நிறைய கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி இருப்பதாகவும் கூறுகிறார். இதைக்கேட்டுக் கொண்டிருந்த ஜனனி, அத்தை வேண்டுதல் எல்லாம் அப்புறம் பண்ணிக்கொள்ளலாம். அதற்கு முன்னாடி முக்கியமான வேலை ஒன்னு இருக்கு என சொல்கிறார்.
ஜனனி சொன்னதைக் கேட்டு ஷாக் ஆன விசாலாட்சி
என்னடி அது என விசாலாட்சி கேட்க, அதற்கு ஜனனி, சக்தி கிடைச்சதுக்கு இப்படி சந்தோஷப்படுறீங்க, ஆனா அவன் இப்படி ஆனதற்கு உங்க இன்னொரு பையன் தான் காரணம். இப்போ செஞ்ச தப்பு எல்லாத்துக்கும் சேர்த்து, தண்டனை கிடைச்சிரும்னு உங்க பையன் இப்போ தலைமறைவா இருக்காரு. எப்படியும் உங்களுக்கு கவலை இல்லாம இருக்காது. அதை நான் தப்புன்னு சொல்லல. பெத்த அம்மாவுக்கு எல்லா குழந்தைகளும் ஒன்னு தான். ஆனா, அதையெல்லாம் தாண்டி, இன்றைக்கு தேவகியில் ஆரம்பித்து, ஈஸ்வரி அக்கா, பார்கவி, சக்தி வரைக்கும் எல்லாருக்கும் ஒரு நியாயம் கிடைக்கனும்னா, இதைவிசாரிக்க போலீஸ் நம்ம வீட்டுக்கு வரும்போது நீங்க உண்மையை சொல்லனும் என கூறுகிறார் ஜனனி.
விசாரணையில் இறங்கிய கொற்றவை
இதையடுத்து விசாரணை நடத்த கொற்றவை வீட்டுக்கு வருகிறார். அப்போது, வீட்டுல இருக்குற எல்லாருமே நடந்த உண்மையை மறைக்காமல் சொன்னால் தான் எங்களால் நியாயமான ஆக்ஷன் எடுக்க முடியும் என கூறுகிறார் கொற்றவை. பின்னர் விசாலாட்சியிடம் விசாரணை நடத்த தொடங்கும் அவர், இப்போ நீங்க சொல்றதை வச்சு தான் குணசேகரனுக்கு கிடைக்கப் போற தண்டனை, ஸ்ட்ராங் ஆக மாறும், தைரியமா சொல்லுங்க என கொற்றவை கேட்க, அதற்கு விசாலாட்சி என்ன சொன்னார். அவர் குணசேகரனுக்கு எதிராக சொன்னாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

