- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கை உடைந்தும் திருந்தாத அறிவுக்கரசி; ஜனனிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
கை உடைந்தும் திருந்தாத அறிவுக்கரசி; ஜனனிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்த நந்தினி, ஜனனிக்கு போன் போட்டு அதிர்ச்சி தகவல் ஒன்றை சொல்லி இருக்கிறார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வீட்டுக்குள் எண்ட்ரியானதும் அரிவாள் எடுத்து வெட்ட வந்த அறிவுக்கரசியை எட்டி உதைத்து தர்ம அடி கொடுக்கிறார் ஜனனி. அதுமட்டுமின்றி அவரை கீழே தள்ளிவிட்டு கையையும் உடைத்துவிடுகிறார். இதையடுத்து உள்ளே சென்றதும் விசாலாட்சியிடம் ஆதி குணசேகரன் பற்றிய உண்மைகளை எல்லாம் கூறுகிறார். அதுமட்டுமின்றி இந்த சொத்து அனைத்தும் தேவகி உடையது எனவும், அதை அபகரித்துவிட்டு தேவகியை ஆதி குணசேகரன் கொலை செய்த விஷயத்தையும் ஜனனி சொல்ல, அதைக்கேட்டு ஷாக் ஆகிறார் விசாலாட்சி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நந்தினி சொன்ன ஷாக்கிங் தகவல்
ஈஸ்வரியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்த நந்தினி, அங்கிருந்து ஜனனிக்கு போன் போட்டு பேசுகிறார். 15 லட்சம் கொடுத்தால் தான் ஈஸ்வரி அக்காவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்போம் என ஆஸ்பத்திரியில் இருந்து சொன்னது எல்லாமே ஆதி குணசேகரன் மிரட்டலுக்கு பயந்து தான் சொல்லி இருக்கிறார்கள். அக்கா இன்னைக்கு உசுரோட இருக்குறதே பெரிய விஷயம்னு சொல்றாங்க. அவரை கொலை பண்ண பல வழிகளில் முயற்சி செஞ்சிருக்கான் அந்த மனுஷன் என கண்ணீர்விட்டு கலங்கியபடி கூறுகிறார் நந்தினி. இதையெல்லாம் போனில் கேட்ட தர்ஷன், தர்ஷினி அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
கோபத்தில் பொங்கிய தர்ஷன்
தன் அம்மாவை கொல்ல நினைத்த அந்த ஆளை விடக்கூடாது என கூறும் தர்ஷன், அந்த ஆள் சாக வேண்டும், அவரை என் கையாலேயே கொன்றால் தான் என்னுடைய ஆத்திரம் அடங்கும் என கூறிவிட்டு கோபத்துடன் வெளியே செல்கிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் ஜனனி, நம்ம இப்படி எமோஷனல் ஆக வேண்டும் என்பதற்காக தான் அவர் இப்படியெல்லாம் செய்கிறார். நீ அமைதியா இரு என கூறுகிறார். இன்னும் கொஞ்ச நாள்ல அந்த ஆள் உள்ளே போய்விடுவார் என ஜனனி சொல்ல, அதற்கு தர்ஷன், இல்ல சித்தி அந்த ஆள் திருந்த மாட்டாரு. திரும்பவும் வெளிய வந்து இந்த அநியாயத்தை பண்ணிகிட்டு தான் இருப்பார் என சொல்கிறார்.
ரீ-எண்ட்ரி கொடுக்கும் அறிவுக்கரசி
பின்னர் நந்தினியிடம், அக்கா நல்லா இருக்காங்களா என கேட்கும் ஜனனி, அவரை அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை நாம் செய்யலாம் என கூறுகிறார். அக்கா நிச்சயம் திரும்ப வருவாங்க, நம்ம நாலு பேரும் முடிவெடுத்தபடி ஃபுட் டிரக் பிசினஸை ஆரம்பிப்போம் என கூறுகிறார் ஜனனி. இந்த வேளையில், வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார் அறிவுக்கரசி. ஜனனி அவர் கையை உடைத்துவிட்டதால், மாவுக்கட்டு போட்டுக்கொண்டு வீட்டுக்குள் வருகிறார் அறிவுக்கரசி. இதையடுத்து என்ன ஆனது? ஆதி குணசேகரனை போலீஸ் கைது செய்ததா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

