ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை ரிலீஸ் செய்யப்பட்டது. மும்பையில் நடைபெற்ற அந்த விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சுனில் ஷெட்டி, அனிரூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

"தர்பார்" படத்தில் சூப்பர் காப் ஆக வந்த ரஜினிகாந்தின் மாஸ் அண்ட் ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் கெத்தான போலீஸ் அதிகாரியாக அசத்தியுள்ள ரஜினிகாந்த், அந்த வேடம் குறித்து ட்ரெய்லர் ரிலீஸ் விழாவில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த அதிரடி பதில் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் சொன்னது நிஜம் தான்பா... செம்ம கிளாமர் லுக்கில் நயன்தாரா... தர்பார் ட்ரெய்லரை கொண்டாடும் நயன் ஃபேன்ஸ்...!

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஏன் நீங்க அவ்வளவா போலீஸ் வேடத்தில் நடிப்பதில்லை என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சூப்பர் ஸ்டார், எனகு போலீஸ் வேடங்களில் நடிப்பது சுத்தமா பிடிக்காது என அதிரடியாக பதிலளித்தார். மேலும் போலீஸ் என்றால் சீரியஸா  இருக்கனும், கிரிமினல் பின்னாடி ஓடனும். ஆனால் நான் மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன். அதனால் தான் இதுபோன்ற வேடங்களில் நடிப்பதில்லை என தெரிவித்தார். 

போலீஸ் வேடத்தில் ரஜினி வந்து நின்னாலே செம்ம கெத்தாக இருக்கும். சூப்பர் ஸ்டார் போலீஸ் அதிகாரியாக வந்து கலக்கிய "மூன்று முகம்", "பாண்டியன்" போன்ற படங்களே அதற்கு சிறந்த உதாரணம். அப்படி இருக்க சூப்பர் ஸ்டார் இப்படி அதிரடி பதிலளித்துள்ளது, அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் செம்ம இளமையாக துள்ளி குதித்து நடித்துள்ள சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.  இதனால் #DarbarTrailer என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.