தல அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு "நேர்கொண்ட பார்வை" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃ பஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில், அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் "பிங்க்" அனைவரின் கவனத்தையும் ஒட்டுமொத்தமாக ஈர்த்தது. ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய மறைந்த ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர். அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின்,  கீ ரோலில், வித்யா பாலன்,ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இப்படத்துக்கு "நேர்கொண்ட பார்வை" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து H.வினோத் இயக்கி வருகிறார். இதன் முக்கியக் காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.