இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் சமூக இடைவெளி தற்போதைக்கு சரியான வழி என அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றன. இந்தியாவில் கூட மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையற்றிய பிரதமர் மோடி அவர்கள் மே 117ம் தேதிக்கு பிறகு நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட வகையில் இருக்கும் என்றும் அறிவித்தார். நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவிற்கான நெறிமுறைகள் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த கொரோனா பிரச்சனையே வேண்டாம் என கவர்ச்சி புயல் சன்னி லியோன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார். 

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி, விதவிதமான விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். 

இதையும் படிங்க: பட்டன் போடாமல் படுகவர்ச்சியாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் அபிராமி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

மும்பையில் குடும்பத்துடன் தங்கி படங்கள் மற்றும் விளம்பரங்களில் சன்னி லியோன் நடித்து வந்தார். தற்போது இந்தியாவிலேயே மகராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது பண்ணை வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதையும் படிங்க: “தொடர் உறவில் இருப்பவர்கள் கைதூக்குங்க”... படுக்கையறை போட்டோவுடன் ஏடாகூட கேள்வி கேட்ட மாளவிகா மோகனன்...!

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், அனைத்து தாய்மார்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள். நமக்கு குழந்தைகள் வந்துவிட்டால் சொந்த நல்வாழ்வும், முன்னுரிமைகளும் பின்னுத்தள்ளப்படும். எனவே நானும் எனது கணவரும் எங்களது குழந்தைகளை கண்ணுக்கு தெரியாத கொலைகார கொரோனா வைரஸிடம் பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். அதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எங்களுடைய பண்ணை வீட்டில் தங்கியுள்ளோம். எனது அம்மாவும் நான் இதை தான் செய்திருக்க வேண்டும் என ஆசைப்படுவார். மிஸ் யூ அம்மா. அன்னையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.