பியாண்ட் த கிளவுட்ஸ் என்ற இந்தி படம் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியில் படித்தில் நடிக்க கமிட்டானார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. படத்தில் சில போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் மட்டும் முடிக்கப்படாமல் இருந்த நிலையில், நேற்று முதல் அவையும் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா பிரச்சனைக்கான தீர்வு தெரியாததால் இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. 


இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. செம்ம கிளாமர் லுக்கில் மாளவிகா மோகனன் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மாஸ்டர் பட அப்டேட்டுகளை எல்லாம் பின்னுத்தள்ளிவிடுகிறது. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

இதையும் படிங்க: கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஷேர் செய்த கார்ட்டூனால் செம்ம கடுப்பானார்.“மாஸ்டர்” டீமைச் சேர்ந்த அனிருத், விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் எல்லாம் லாக்டவுன் காரணமாக ஒரே வீட்டில் இருப்பது போன்றும், மாளவிகா மோகானன் அவர்களுக்கு சமையல் செய்வது போன்றும் கார்ட்டூன் இடம் பெற்றது. இதையடுத்து பெண்கள் இதற்கு மட்டும் தானா என்று சகட்டு மேனிக்கு பொங்கி எழுந்தார். 

இதையடுத்து அந்த கார்ட்டூனை மாற்றிய விஜய் ரசிகர், சமையல் கரண்டி இருந்த மாளவிகாவின் கையில் புத்தகத்தை கொடுத்து குஷியாக்கினார். ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் ரசிகர்களை விதவிதமாக போட்டோ வெளியிட்டு கிக்கேற்றி வருகிறார் மாளவிகா மோகனன். சமீபத்தில் இடையில் இருக்கும் மச்சத்தை துளியும் மறைக்காமல் மாளவிகா வெளியிட்ட செல்ஃபி தாறுமாறாக வைரலாகின. 

இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

இந்நிலையில் படுக்கையறையில் தூங்கி எழுந்த அப்படியே ஹாட்டாக அமர்ந்திருக்கும் போட்டோவை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் “இந்த 51 நாட்களாக லாக்டவுனில் படுக்கையுடன் இணை பிரியாத தொடர் உறவில் இருப்பவர்கள் உங்களுடைய கையை தூக்குங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மாளவிகாவின் இந்த ஏடாகூடமான கேள்விக்கு பலரும் பலவிதமாக பதிலளித்துள்ளனர். இதுவரை 2 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை குவித்து வரும் இந்த ஹாட் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.