இணையதள தேடலின்போது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பெயர் முதலிடத்தில் உள்ளது சன்னிலியோனும் இந்தப் பட்டியலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அவரவருக்கு பிடித்த பிரபலங்களை இணையதளத்தில் பலரும் தேடிப்பிடித்து அவர்களை பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் தேடும்போது வரும் லிங்க்குகள் பயனாளர்களை ஆபத்தான தளங்களுக்கு கொண்டு செல்லும் அபாயம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. தீங்கிழைக்கும் தளங்கள் பயனாளர்களை தங்கள் தளங்களுக்கு கொண்டு வர பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்துகின்றன.

இதையும் படிங்க:- பழங்குடியினருடன் தமிழிசை அசத்தல் நடனம்... வைரலாகும் வீடியோ..!

இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் இணையதளத்தில் தேடும்போது மிகவும் ஆபத்தான தளங்களுக்கு கொண்டு செல்லும் பிரபலங்களின் பட்டியலில் தோனியின் பெயர் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் தோனியை அடுத்து 2வது சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

சன்னி லியோன், பி.வி.சிந்து, ஷ்ரத்தா கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். பயனாளர்கள் பிரபலங்களின் ரகசிய மற்றும் அந்தரங்க செய்திகளை தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதால் இதுபோன்ற ஆபத்தான தளங்களுக்கு சென்றடைவதாக அந்நிறுவனத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:- மதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..? எஸ்.வி.சேகர் கொடுத்த நெத்தியடி..!