Asianet News TamilAsianet News Tamil

சுந்தர்.C - அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும் "ஒன் 2 ஒன்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சுந்தர்.சி மற்றும் பாலிவுட் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யாப் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'ஒன் 2 ஒன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
 

Sunder c and anurag kashyap acting one to one movie first look released
Author
First Published Oct 2, 2023, 10:21 PM IST | Last Updated Oct 2, 2023, 10:21 PM IST

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C  நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது.  ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கமர்ஷியல் விருந்துள்ளது என்பதை ஃபர்ஸ்ட் லுக்   உறுதிப்படுத்துகிறது.

நூலிழையில் தப்பிய 'குக் வித் கோமாளி' செஃப் வெங்கடேஷ் பத் மகள்! உஷார்... பிரபல மாலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் K.திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சுந்தர்.C நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து  நடிக்கின்றனர்.

Bigg Boss: முதல் வாரமே ஒன்று அல்ல இரண்டு நாமினேஷன்! டார்கெட் செய்யப்படும் வனிதா விஜயகுமார் மகள் உட்பட 5 பேர்!

இப்படத்திற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் அட்டகாசமான நான்கு பாடல்களை இசையமைத்துள்ளார். முன்னதாக இவரின் இசையில் பிரமித்து, புத்தம் புதிய ஐஃபோன்  வழங்கி அவரைப் படக்குழு பாராட்டியது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios