நூலிழையில் தப்பிய 'குக் வித் கோமாளி' செஃப் வெங்கடேஷ் பத் மகள்! உஷார்... பிரபல மாலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
குக் வித் கோமாளி, நிகழ்ச்சியின் நடுவரான செஃப் வெங்கடேஷ் பத் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், அதிர்ச்சி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக பல இளம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு எப்படி தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி விடுகிறதோ... அதே போல் 'குக் வித் கோமாளி' முதல் சீசனில் இருந்து, ரசிகர்களையும் - போட்டியாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களை கூறி உற்சாகத்துடன் நான்கு சீசன்களை நேர்த்தியாக கொண்டு சென்ற நடுவர்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.
செஃப் தாமுவை போட்டியாளர்கள் முதல்... கோமாளிகள் வரை அனைவரும் பாசத்தோடு அழைப்பதால், அவரும் அவர்களுடன் மிக விரைவாக ஜெல் ஆகிவிடுவார். ஆனால் செஃப் வெங்கடேஷ் பத்தை பொறுத்தவரை, ஒரு சிறு கண்டிப்பு இவரிடம் இருக்கும். எனவே இவரை சிலர் ஆங்கிரி பேட் என்றும் அழைப்பார்கள். அதே நேரம் லொள்ளு பண்ணும் கோமாளிகளை விரட்டி விரட்டி அடிப்பார்.
சில சமயங்களில் இவர் அடித்து விளையாடுவது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கும் ஆளாகி விடுவது உண்டு. ஆனால் அதற்கும் செம்ம கூலாக தன்னுடைய கருத்தை தெரிவிப்பார். அதே போல், குக்குகள் நன்றாக சமைத்திருந்தால், மனம் திறந்து பாராட்டுவார்.
இந்நிலையில் இவர், சமூக வலைத்தளத்தில், பெற்றோர்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சென்னையில் உள்ள பீனிக்ஸ் என்கிற தனியார் மால் ஒன்றுக்கு... வெங்கடேஷ் பத் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சென்றுள்ளார். அப்போது எஸ்கலேட்டர் ஓரத்தில் அவரின் மகள் கால் வைத்ததில், அவரின் செருப்பு பகுதி உள்ளே சென்றுவிட்டது அவரை நான் கையை பிடித்து இழுக்கவில்லை என்றால், அவரின் காலிலும் அப்டிப்பட்டிருக்கும். எனவே எஸ்கலேட்டரில் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
வெங்கடேஷ் பத்தின் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது.. சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு, நெட்டிசன்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து வெங்கடேஷ் பத் தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம், தன்னுடைய மகள் குறித்து அக்கறையாக விசாரித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.