சிகரெட்... லிப் கிஸ் என மிரள வைத்த சுனைனா! வெளியானது ‘ரெஜினா’ பட டீசர்!
நடிகை சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள ரெஜினா படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.
யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே "SN Musicals" மூலம் பல ஆல்பம் பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 'ரெஜினா' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரோடக்ஷம் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் இன்று வரும் 'ரெஜினா' படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் கலந்து கொண்டார். மேலும் கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டனர்.
இதுவரை அமைதியான கதாபாத்திரங்களையே நடித்துள்ள சுனைனா, இந்த படத்தில்... சிகரெட், லிப் கிஸ் காட்சி என எல்லை மீறி நடித்துள்ள காட்சிகள் வெளியாகி ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள 'ரெஜினா' டீசர் இதோ...