அப்போ எனக்கு 15 வயசு.! அப்போ தெரியல... இப்போ புரிஞ்சிடுச்சு... திருப்பதியில் வனிதா விஜயகுமார் பேட்டி!
நடிகை வனிதா விஜயகுமார் ஏழுமலையான் கோவிலில், சாமி சரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தளபதி விஜய்க்கு ஜோடியாக, 'சந்திரலேகா' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மஞ்சுளா - விஜயகுமார் தம்பதிகளின் மூத்த மகள், வனிதா விஜயகுமார். பின்னர் ஒரு சில வருடங்களிலேயே ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டே மொத்தமாக விலகினார். 2 குழந்தைகள் பிறந்த பின்னர் ஆகாஷ் மற்றும் வனிதா இடையே வெடித்த பிரச்சனை விவாகரத்து வரை சென்றது. இதை தொடர்ந்து இரண்டாம் திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் அந்த வாழ்க்கையில் இருந்தும் விவாகரத்து பெற்றார்.
திருமண உறவை தாண்டி, காதல் சர்ச்சையில், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். ஆனால் அந்த உறவும் நீடிக்கவில்லை. மேலும் சமீபத்தில், வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் உடல்நலமின்றி உயிரிழந்தார். அப்போது பீட்டர் பால் என்னுடைய கணவர் இல்லை. இருவரும் உறவில் மட்டுமே இருந்தோம் என அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார் வனிதா.
பிச்சைக்காரன் 2 திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? லாபம் மட்டும் இத்தனை கோடியா?
மேலும் தற்போது தன்னுடைய மகளுடன், வசித்து வரும் வனிதா... விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின், அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார்.
தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர் தமிழில், நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்கள் வரிசையாக திரைக்கு வர உள்ளன. சமீபத்தில் நான் நடித்த படங்களில் அநீதி என்ற பெயரிலான படம் அடுத்து திரைக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். அதே போல் தெலுங்கில் நான் நடித்திருக்கும் மல்லி பெல்லி என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என கூறினார்.
நான் திரைத்துறையில் காலடி வைத்த போது மிகவும் சிறிய பெண். அப்போது எனக்கு வயது 15. எனவே திரைத்துறையை பற்றி அவ்வளவாக நான் அப்போது அறிந்திருக்கவில்லை. இப்போது திரை துறையை நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன். நடிப்பு தொழிலுக்கு வரும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. திரைத்துறையில் என்னுடைய இரண்டாவது இன்னிங்சிற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நல்ல வரவேற்பு எனக்கு உள்ளது என்று கூறினார்.