வெளியீட்டு உரிமை ரெட் ஜெயன்ட் சாட்டிலைட் உரிமை சன் டிவி PS 1 வளைத்து பிடித்த திமுக குடும்பம்
வெளியீட்டு உரிமை, சேட்டிலைட் உரிமை என மொத்த உரிமைகளையும் தங்கள் வசமாகியுள்ளது ஆளும் கட்சியான திமுகவின் வாரிசுகள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
கல்கியின் பிரபலமான நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க திரையுலக பிரபலங்கள் பலரும் முயற்சித்து விட்டனர். இந்த மாபெரும் சாதனையை தற்போது நனவாக்கி உள்ளார் இயக்குனர் மணிரத்தினம். பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு தற்போது இந்த படம் திரைக்கான உள்ளது. வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரபு, சரத்குமார் என நட்சத்திரங்கள் பலரும் சோழ வம்ச, வாரிசுகளாகவும் அவர்களது தோழர்களாகவும், காதலிகளாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை, ட்ரெய்லர் உள்ளிட்டவை சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவின் மூலம் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் உலக நாயகன் கமலஹாசன், ரஜினிகாந்த், ஷங்கர் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் கட்டாயம் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்து வருகிறது. இதனை இசையை ஏ ஆர் ரகுமான் அமைத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்!
இந்நிலையில் பொன்னியின் செல்வனின் சாட்டிலைட் உரிமையை ரூபாய் 25 கோடிக்கு சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல இப்படத்தின் ஓடிடி உரிமையை 100 கோடிக்கு மேல் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழக வெளியீடு உரிமையை பிரபல நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இவ்வாறு வெளியீட்டு உரிமை, சேட்டிலைட் உரிமை என மொத்த உரிமைகளையும் தங்கள் வசமாகியுள்ளது ஆளும் கட்சியான திமுகவின் வாரிசுகள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...உடலில் ஒட்டி இருக்கும் உள்ளாடை... கீழே கர்ச்சீப் போன்ற துணியை கட்டிக்கொண்டு செமி நியூடாக போஸ் கொடுத்த நடிகை..!