தமிழ் சினிமாவில் பிளஸ் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், நிலையான இடத்தை பிடிக்க முடியாததால், குணச்சித்திரம் மற்றும் சில படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுபவராக ரசிகர்களால் அறியப்பட்டவர் சுஜா வருணி.

சமீபத்தில் இவர் நடிப்பில் 'கிடாரி', 'பென்சில்', உள்ளிட்ட படங்கள் வெளியாகியது.  உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

ஆனால் இவர் நடிகை ஓவியாவை போல் நடந்து கொள்ள முயற்சி செய்வதாக எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார்.

மேலும் கடந்த ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன், சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார் முழுமையாக திரையுலகை விட்டே விலகினார். இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக உள்ளதாகவும் அறிவித்தார். இதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்நிலையில் சிவப்பு நிற உடையில், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ஆடை வடிவமைப்பாளர் கொடுத்த பரிசுக்கும் , அவரின் அன்பிற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.