suja take the oviya palace

குணசித்திர வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வருபவரும், கவர்ச்சி நடன கலைஞருமான சுஜா வருணி நேற்றைய தினம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் வந்ததுமே ரைசாவிடம் சென்று அவருடைய தாய் மொழியான கன்னடத்தில் பேசினார், அதே போல் பிந்துவிடம் தெலுங்கிலும், கணேஷிடம் இந்தியிலும், ஆரவிடம் உருதுவிலும் மற்ற நபர்களிடம் தமிழில் பேசி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் தனக்காக ஒரு படுக்கையை தேர்வு செய்ய ரைசா மற்றும் கணேஷ் ஆகியோர் உதவி செய்தனர். அப்போது ஓவியாவின் பெட்டில் அமர்ந்துக்கொண்டு இது தான் தன்னுடைய இடம் என கூறினார். 

சுஜா பெட் விஷயத்தில் ஓவியாவின் இடத்தை பிடித்துவிட்டதை போல ரசிகர்கள் மனதிலும் ஓவியாவை போல் இடம் பிடிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.