போவதற்குள் ஒரு வழி செஞ்சிட்டு தான் போவேன் என 2020ம் ஆண்டு தீர்மானம் செய்திருக்கிறது போல் தெரிகிறது. எப்படிடா முடியும் என எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையிலும், அடுத்தடுத்து காதுக்கு வரும் கேட்ட செய்திகளால் சினிமா ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் வழக்கமான பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனை சென்றதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

தற்போது பிரபல இயக்குநர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலையாளத்தில் முதன் முறையாக ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘சூஃபியும் சுஜாதாயும்’. கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதாரி, தேவ் மோகன், சித்திக் உட்பட பலர் நடித்திருந்த இந்த படத்தை நரனிபுழா ஷாநவாஸ் என்பவர் இயக்கியிருந்தார். 

சமீபத்தில் தனது அடுத்த பட கதைக்காக ஷாநவாஸ் அட்டப்பாடி வந்துள்ளார். அங்கு அவருக்கு கடந்த சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள ஷா நவாஸை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.