கே.ஜி.எஃப்’ மற்றும் 'கே.ஜி.எஃப் 2’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய Hombale Films நிறுவனத்திற்காக படம் இயக்க சுதா கொங்கரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹிட் கொடுத்த சூரரை போற்று :
கடந்த 2020-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ச்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்தியில் ரீமேக் ஆகும் சூரரை போற்று :
இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே கதையை இந்தியில் இயக்க சுதா கொங்காரா முடிவு செய்துள்ளார்.முன்னதாக ’இறுதிச்சுற்று’படத்தை இயக்கியதன் மூலம் மிக அறியப்பட்ட இயக்குனர் ஆன இவர் துரோகி’ என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர். மிகவும் வித்யாசமான கதை மூலம் ரசிகர்களை ஈர்க்கும் முன்னணி பெண் இயக்குனராக வலம் வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...தளபதியுடன் இணைந்த 80 ஸ் காதல் மன்னன்..விஜய் 66 சூப்பர் அப்டேட்..

'கே.ஜி.எஃப்’ கூட்டணியில் சுதா கொங்காரா :
மிகவும் பிரபலமான இவர் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை தற்போது வெளியாகி மாஸ் காட்டி வரும் 'கே.ஜி.எஃப்’ மற்றும் 'கே.ஜி.எஃப் 2’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய Hombale Films நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை Hombale Films நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது.
