தளபதியுடன் இணைந்த 80 ஸ் காதல் மன்னன்..விஜய் 66 சூப்பர் அப்டேட்..
விஜயின் அடுத்த அதிரடியான தளபதி 66 படம் குறித்த எதிரிபார்ப்பு அதிகரித்து வரும் வேளையில் அதன் அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

beast
சமீபத்தில் நெல்சன்- விஜய் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படம் வெளியான சில நாட்களில் 100 கோடியை தாண்டி தமிழக்கதில் மட்டும் வசூலை செய்த்தது.
vijay 66
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே விஜய் 66 வது படமும் கன்பார்ம் ஆனது. தளபதி 66 படத்தை தோழா பட இயக்குனர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
vijay 66
விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, நடிகை ராஷ்மிகா, தயாரிப்பாளர் தில் ராஜு, பாடலாசிரியர் விவேக், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
vijay 66
விஜயின் சமீபத்திய வெற்றியான அரபிக் குத்து பாடல் படமாக்கப்பட்ட அதே இடத்தில் இந்த படத்தின் முதல் பாடலும் உருவாகியுள்ளது. தமன் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சூட்டிங் சென்னையில் 4 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு... மகளுக்கு சமஸ்கிருத பெயர் வைத்த பிரியங்கா - நிக் ஜோனாஸ்...பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
vijay 66
இதையடுத்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் 20 நாட்கள் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்ட செட்டப் அமைக்கப்பட்டு வருகிறது. அதோடு அங்கு மே முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
Vijay 66
இதையடுத்து விஜயின் வேண்டுகோளுக்கு இணங்க படத்தின் மொத்த சூட்டிங்கையும் சென்னியில் நடத்த தயாரிப்பாளர் ஓகே சொல்லியுள்ளாராம்.
மேலும் செய்திகளுக்கு...தாயான காஜல் அகர்வால்..பிரசவம் குறித்து வெளியிட்ட எமோஷ்னல் போஸ்ட்
Vijay 66
செண்டிமெண்ட் பாதையில் உருவாக்கவுள்ள இந்த படத்தில் சரத்குமார் விஜயின் தந்தியாக நடிக்கவுள்ளதாகவும், விஜயின் இரு அண்ணன்கள் கேரக்டரில் நடிக்க மூத்த நடிகர்களிடம் படக்குழு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
Vijay 66
இந்நிலையில் இந்த படத்தின் புது அப்டேட்டாக 80ஸ் சூப்பர் ஹீரோ மைக் மோகன் இந்த படத்தில் இணைந்துள்ளாராம். இவர் நாயகி ராஷ்மிகாவின் தந்தையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.