தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா சமீபத்தில் நடித்த ராட்சசி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் புகழ் பெற்றது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்ததற்காக ஜோதிகாவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது விழாவில் கோவில்கள் பற்றி ஜோதிகா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அந்த நிகழ்ச்சியில், பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. 

எல்லாருக்கும் கோரிக்கை, ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். 

இதையும் படிங்க: “சூர்யா குடும்பம் மட்டும் பொழச்சா போதுமா?”... பொங்கி எழுந்த பிரபல தியேட்டர் உரிமையாளர்...!

எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசியிருந்தார். ஜோதிகாவின் இந்த பேச்சு இந்துக்களின்  மனதை புண்படுத்திவிட்டதாக கூறி கடந்த ஒரு வாரமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை வெடித்துள்ளது.

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

 இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை ஜோதிகாவின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் இப்படி பேசி வருகின்றனர். இனி வரும் காலங்களில் இந்து மதம் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.