இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையான 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டுமென தமிழகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதியும் அந்த படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்கு முன்னதாக அந்த படத்திலிருந்து விலக வலியுறுத்தி, மர்ம ஆசாமி ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது சர்ச்சையை உருவாக்கியது. 

 

இதையும் படிங்க: சன் டி.வி. ரசிகர்களுக்கு அதிர்ச்சி... விரைவில் நிறுத்தப்படுகிறது பிரபல சீரியல்...!

ட்விட்டரில் சொல்லவே கூசும் வார்த்தைகளில் அந்த நபர் போட்ட பதிவிற்கு எதிராக திரையுலகினரும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். @ItsRithikRajh என்ற ட்விட்டர் ஐடி யாருடையது என்பதை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. இதையடுத்து அந்த ட்விட்டர் ஐடி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அது இலங்கையைச் சேர்ந்த நபருடையது என்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நபரை கைது செய்ய இலங்கை போலீசாரின் உதவியும் கோரப்பட்டிருந்தது. 

 

இதையும் படிங்க: இடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...!

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த ஊடகம் ஒன்று அந்த நபரிடம் பேட்டி எடுத்துள்ளது. அதில் இந்திய, இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழர்களிடமும் மன்னிப்பு கோரிவதாகவும், என்னை நம்பியுள்ள குடும்பத்திற்காகவாவது என்னை மன்னித்துவிடுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடுங்க விஜய் சேதுபதி அண்ணா என மன்னிப்பு கோரியுள்ளார். அவருடைய அம்மாவும் தனது மகனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் மன்னிக்கும் படியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.