நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தன்னுடைய மகள் ரூபிக்காவுடன் ரிக்ஷா மாமா பாடலுக்கு ரீல்ஸ் செய்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான மஞ்சுளா - விஜயகுமார் தம்பதிக்கு கடைசி மகளாக பிறந்தவர் தான் ஸ்ரீதேவி. தன்னுடைய 6 வயதிலேயே நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்த 'ரிக்ஷா மாமா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். பின்னர் அம்மா வந்தாச்சு, டேவிட் அங்கிள், தெய்வ குழந்தை, உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே சைல்ட் ஆர்டிஸ்ட்டாக நடித்த ஸ்ரீதேவி, பின்னர் ஹீரோயினாக அறிமுகமானார்.
2002-ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதிலேயே தெலுங்கில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக 'ஈஸ்வர்' என்கிற படத்தில் நடித்த ஸ்ரீதேவி, அதே ஆண்டு தமிழில் நடிகர் ரிச்சர்டுக்கு ஜோடியாக காதல் வைரஸ் படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் நடிகர் மாதவனுக்கு தோழியாக நடித்த 'பிரியமான தோழி' திரைப்படம் ஸ்ரீதேவிக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் இபபடத்திற்க்காக ஸ்ரீதேவி பெற்றார்.

அடுத்தடுத்து தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பிசியாக நடித்து வந்ததால், தமிழில் எண்ணி 4 படங்கள் மட்டுமே நடித்தார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே... சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் என்பவரை ஸ்ரீதேவி 2009 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள இவருடைய தாயார் மஞ்சுளாவின் உடல்நிலையும் ஒரு காரணம் என கூறப்பட்டது.
ஸ்ரீதேவிக்கு திருமணம் ஆன 4 வருடத்திலேயே மஞ்சுளா உயிரிழந்தார். மஞ்சுளா மறைந்து 3 வருடங்கள் கழித்து தான் ஸ்ரீதேவிக்கு ரூபிக்கா பிறந்தார். இவர் அப்படியே மறைந்த நடிகை மஞ்சுளா போல் இருப்பது தான் ஆச்சர்யமே. இதனை குறிப்பிட்டு பலமுறை நடிகை ஸ்ரீதேவி தன்னுடைய மகளை அம்மாவின் மறு உருவமாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ரீதேவியின் மகள் ரூபிகாவுக்கு 8 வயது ஆவது குறிப்பிடத்தக்கது.
மகள் வளர்ந்து விட்டதால், மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரீதேவி விஜயகுமார், மகளுடன் வெகேஷனுக்கு சென்ற போது... அவருடன் ஜாலியாக சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
