தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக, அடுக்கடுக்காக பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கியவர், நடிகை ஸ்ரீ ரெட்டி.

இவரின் சர்ச்சையில் நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர் சி, லாரன்ஸ்,  ஏ.ஆர் முருகதாஸ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சிக்கினர்.

சமீபகாலமாக இவருடைய முகநூல் பக்கத்தில், குற்றச்சாட்டு பதிவுகள் இல்லை என்றாலும்... தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக பட வசனங்களை ஜாலியாக பேசி பதிவிறக்கம் செய்து வருகிறார்.

தற்போது  தமிழில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும்  இவருடைய நடிப்பில் 'ரெட்டியின் டைரி' என்ற படம் உருவாகியுள்ளது. ஒரு சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தல அஜித் பற்றி இவர் போட்டுள்ள ஒரு பதிவு அஜித் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில்... "அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு இந்த புகைப்படத்தை பார்த்தது முதல் நான் தூங்கவில்லை...  இவர் தான் தமிழ்நாட்டில் நம்பர் 1 நடிகர் என கூறியுள்ளார். மேலும் அனைத்து விதமான சர்ச்சைகளிலும் இருந்து விலகிய இருக்கிறார், மிகவும் மென்மையாக பேசும் மனிதர், அக்கறையோடு குடும்பத்தை கவனிப்பவர். இதனால் தான் இவரை அதிக ரசிகர்கள் நேசிக்கின்றனர். இவர் சிறந்த கணவர், சிறந்த தந்தை, என புகழ்ந்து தள்ளியுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் பல கோடி பெண்களின் இதயத்தை திருடி விட்ட இவர்  என் இதயத்தையும் திருடிவிட்டார் எனக்கூறி... உங்கள் காலின் கீழ் என் 'தலை' இருக்கும் 'தல' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு அஜித் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.