பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து பாடும் நிலா எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று, மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகு வத்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் நடத்திய பிரார்த்தனையின் பலனாக அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறது.

மேலும் செய்திகள்: விஜய் டிவி பாண்டியன் ஸ்டார் முல்லைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..! மாப்பிள்ளை இவர் தான்...
 

இந்நிலையில் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்றில், அப்பாவின் உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை ரிசல்ட் நெகட்டிவ் என வந்ததாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்திருந்தார்.

 

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத டாப் 20 அரிய புகைப்படங்கள்... உலக அழகினு சும்மாவா சொல்றாங்க..?
 

இதை தொடர்ந்து தற்போது எஸ்.பி.பி.சரண் லட்சக்கணக்கான எஸ்.பி.பி.ரசிகர்கள் மனதை குளிர்விப்பது போல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, "பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 90% மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார், எனவே விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என்று அந்த வீடியோவில் சரண் தெரிவித்துள்ளார்.