பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர். 

கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் சீரான நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த எஸ்.பி.பி.யின் உடல்நிலை நேற்று மீண்டும் கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகளுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது காந்த குரலால் வசீகரித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் நல்லபடியாக மீண்டு வர வேண்டுமென ஓட்டுமொத்த ரசிகர்களும் பிரார்த்தித்து வருகிறார். இந்நிலையில் எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து பல வதந்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் விதமாக அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார். 

 

இதையும் படிங்க: “மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பா வென்டிலேட்டர் சப்போர்ட்டில் இல்லை என வதந்தி பரப்பப்படுகிறது. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இருந்தது போலவே அவருடைய உடல் நிலை உள்ளது. எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அப்பாவின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. உங்களுடைய பிரார்த்தனைகள் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவுகிறது. அதனால் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என கோரிக்கைவிடுத்துள்ளார். 

View this post on Instagram

#spb health update 18/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on Aug 18, 2020 at 3:55am PDT