பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவர்கள் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி, தனக்கு லேசான காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தனக்கு மிகவும் குறைவான அளவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரையின் படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் கவலை அடைவார்கள். அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். என்னைப் பற்றி எண்ணிரும் அஞ்ச வேண்டாம். மேலும் தனது உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக பல போன் கால்கள் வருகின்றன. என்னால் அனைவரிடமும் பேச முடியவில்லை, மருத்துவர்கள் என்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தார். 

 

இதையும் படிங்க: துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!

இந்நிலையில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை  சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில், கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை மையத்தில் சேர்ந்த அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது கண்காணித்து வருகிறது. அவருக்கு சீரான பிராணவாயு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலம் பெற வேண்டும் என விரும்பிய மற்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் இருந்து கிடைத்த இந்த நல்ல செய்தியால் எஸ்.பி.பி. ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.