பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  

இதையடுத்து  எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன் பலனாக கடந்த சில நாட்களாகவே எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து நல்ல தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராகி வருவதாகவும், உயிர் காக்கும் கருவிகளுடன் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தது. தற்போது மயக்க நிலையில் இருந்து முழுமையாக மீண்டுள்ள எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் அப்பாவின் உடல் நிலை குறித்து அப்டேட் கொடுத்து வருகிறார். 

 

இதையும் படிங்க: கல்யாண நாளில் கணவருடன் லிப்லாக்... செம்ம ரொமாண்டிக்கான போட்டோவை வெளியிட்ட விஷால் பட நடிகை...!

இன்று எஸ்.பி.சரண் தனது தந்தையின் உடல்நிலை குறித்து தெரிவித்திருக்கும் அப்டேட்டில், “எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது. முன்னேற்றத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார். இந்த நல்ல செய்தி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றுடன் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருடைய தாய் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.