உலக நாயகன் கமல் ஹாசனின் விக்ரம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது குறித்த ட்வீட் பதிவு வைரலாகி வருகிறது.
உலகநாயகனுடன் மாஸ்டர் இயக்குனர் :
கார்த்தியின் கைதி, விஜயின் மாஸ்டர் என ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என நட்சத்திரங்கள்நடித்துள்ள இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதோடு அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரிலீஸுக்கு தயாரான விக்ரம் :
கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போன விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இது குறித்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. அதோடு இந்த படத்தை முடித்து கொடுப்பதற்காக கமல் தான் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தற்போது பின்னணி பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள இப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...Rajini 169 : நெல்சன் தான் இயக்குநர்..! தில்லாக முடிவெடுத்த ரஜினி...

இசை வெளியீட்டு விழா :
இதற்கிடையே விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடத்த கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற மே மாதம் முதல் வாரத்தில் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...அஜித் பிறந்தநாளில் ரசிகர்களின் வீடு தேடி வரும் விருந்து. ..அடுத்தகட்ட பிரீமியர் அப்டேட்..
உதயநிதி கைப்பற்றிய பட உரிமை :
உலகளவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தைபிரமாண்டமாக ரெட் ஜெயண்ட் புரமோட் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெற்கு ரயில்வே நிறுவனத்தை நாடியுள்ள ரெட் ஜெயண்ட் நிறுவனம் விக்ரம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரயில் என்சினில் வரைந்தது வெளியிட்டு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
