எல்லாருக்கும் ஹாப்பி தீபாவளி.. மகனோடு ஏர்போர்ட்டில் - வாழ்த்துக்கள் சொன்ன இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா!
Prabhu Deva : தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகிலேயே மிகப்பெரிய டான்ஸ் மாஸ்டர் ஆகவும், சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்துவரும் ஒருவர்தான் பிரபுதேவா.
கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான இந்து என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். அதன்பின் அதே 1994 ஆம் ஆண்டு, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான "காதலன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கிய பிரபுதேவா அதனை தொடர்ந்து மாபெரும் நடிகராக உருவெடுத்தார்.
ராசையா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா என்று பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் அவர். நடிகராக மட்டுமல்லாமல், நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் தற்போது விளங்கிவரும் பிரபு தேவா நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் பஹீரா தான்.
தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வரும் பிரபுதேவா தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி அவர்களின் 68வது திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடத்து வருகிறார்.
விஜய் அண்ணா ஓகே சொல்லிட்டாரு.. இரு மலைகளை இணைக்க காத்திருக்கும் அட்லீ - அப்போ மாஸ் சம்பவம் லோடிங்!
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, வில்லு மற்றும் ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், விஷாலின் வெடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியது பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில் தனது மகனுடன் இணைந்து அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.