விஜய் அண்ணா ஓகே சொல்லிட்டாரு.. இரு மலைகளை இணைக்க காத்திருக்கும் அட்லீ - அப்போ மாஸ் சம்பவம் லோடிங்!
Atlee Kumar : பிரபல இயக்குனர் சங்கர் அவர்களுடைய உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "ராஜா ராணி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் களமிறங்கியவர் தான் அட்லி.
Mersal Vijay
இதுவரை இவருடைய இயக்கத்தில் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி உள்ளது, இவை ஐந்துமே வெற்றி திரைப்படங்களாக மாறி உள்ள திரைப்படங்கள் என்று கூறினால் அது மிகையல்ல. ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என்று தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களை தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கி வெற்றி படங்களாக மாற்றியவர் அட்லி.
Shah Ruk Khan
இறுதியாக இந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் உலகின் பாஷாவான ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம், அட்லீ பாலிவுட் இயக்குனராக மாறினார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் கால் பதித்தது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வசூல் சாதனையை படைத்தது.
Director Atlee
இந்நிலையில் இயக்குனர் அட்லீ அண்மையில் ஒரு பேட்டியில் பேசியபோது, தளபதி விஜய் அவர்களையும், ஷாருக்கான் அவர்களையும் இணைத்து ஒரு திரைப்படம் எடுக்க ஆவலாக இருப்பதாகவும். அது என்னுடைய அடுத்த திரைப்படமாக இருக்கக்கூட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த படத்திற்கான சரியான கதையை எழுதி வருவதாகவும், ஏற்கனவே தளபதி விஜய் அவர்களும் ஷாருக்கான் அவர்களும் அந்த படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஒரு மாஸ் தகவலை கொடுத்துள்ளார் இயக்குனர் அட்லி.