தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது போராட்டக்காரர்கள் மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கியும் இப்போதும் பலர் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலை தளம் மூலமாக தெரிவித்து கொண்டுதான் உள்ளனர் .

மேலும் பீட்டாவிற்கு ஆதரவாக செயல் பட்டதாக நடிகர் விஷால், ஆர்யா, தனுஷ், திரிஷா ஆகியோர் மீது பல எதிர்ப்புகள் வந்தன. அவர்கள் நாங்கள் இப்போது பீட்டா அமைப்பில் இல்லை என்றும் . ஜல்லிக்கட்டை தாங்கள் எதிர்க்கவில்லை என கூறியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார் .

இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சூப்பர் ஸ்டார் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விலங்குகள் நல அமைப்பின் இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டதற்கும் பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

மேலும் இப்போது ஜல்லிக்கட்டுக்கான தடையை விலகியும், சௌந்தர்யா ரஜினிகாந்த் தூதுவராக நியமிக்க பட்டுள்ள விலங்குகள் நல அமைப்பும் பீட்டாவும் இணைந்து மத்திய அரசின் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது.

மற்ற நடிகர்கள் நடிகைகள் பீட்டாவில் இருந்து விலகியுள்ள நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்னும் அந்த அமைப்பில் தான் உள்ளாரார் , என கூறப்படுகிறது. 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ரஜினியின் ஒட்டு மொத்த குடும்பமே ஆதரவு தெரிவித்த நிலையில் 
ஏன் இன்னும் இவர் எதுவும் சொல்லாமல் விலங்குகள் நல அமைப்பில் இருக்கிறார் என கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

பலர் சௌந்தர்யா யாருக்கு ஆதரவாக உள்ளார் என தெரிவிக்க வேண்டும் என சமூக வலை தளம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளனர், ஒரு சிலர் இவர் அமைதியாக இருப்பது ஜல்லிக்கட்டை எதிர்ப்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது என தெரிவித்து வருகின்றனர். இதில் எது உண்மை என அவரே கூறினால் தான் தெரியவரும்.