சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் தம்பதியினர், தருமை ஆதினம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

கோச்சடையான் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

களைகட்டும் காதல்! 45 வயதாகும் அஜித் மச்சினன் ரிச்சர்ட் மேல படுத்து கொண்டு ரொமான்ஸ் செய்யும் யாஷிகா!

இதையடுத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நடிகரும், பிஸினஸ்மேனுமான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வீர் என்று ஒரு மகன் உள்ளான். தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது! கோரமண்டல் ரயில் விபத்து பற்றி கமல்ஹாசன் ட்வீட்!

இந்தநிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் தம்பதியர் இன்று தருமை ஆதினம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்ப்பத்தை தொடர்ந்து காதலரோடு இணைந்து வெளியிட்ட மோதிர விரல் புகைப்படம்! அப்போ கல்யாணம் ஆகிடுச்சா?