நடிகர் சூர்யா, நடிப்பில் கடைசியாக வெளிவந்த NGK மற்றும் காப்பான் ஆகிய படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், அடுத்ததாக வெளியாக உள்ள, 'சூரரை போற்று' படத்திற்காக செம்ம வைட்டிங்கில் உள்ளனர், சூர்யாவின் ரசிகர்கள். 

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அழகிய காதல் பாடலை, காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக, இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக, மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், மனோபாலா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த காதல் பாடல், சூர்யாவின் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…