என்.ஜி.கே. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா "சூரரைப் போற்று" படத்தில் நடித்துள்ளார். 'இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்காரா இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் 2D எண்டர்டைன்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

 

இதையும் படிங்க: ஆரம்பமே அதிரடி...! தூள் கிளப்பும் சூர்யா...! "சூரரைப் போற்று" ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைச்ச செம்ம ரெஸ்பான்ஸ்...!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. "சூரரைப் போற்று" படத்தில் சூர்யாவின் பெயர் மாறன் என வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் போஸ்டரைப் பார்த்து ஆகா, ஓஹோ என புகழ்ந்தனர். சூர்யா ரசிகர்களே மாஸ், வெறித்தனம், சூப்பர், மிரட்டல் என கொண்டாடினர். இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட "சூரரைப் போற்று" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை 1 மில்லியன் பேர் ட்வீட் செய்துள்ளனர்.  மேலும் #Maara என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிடுங்கள் என சூர்யா ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது "சூரரைப் போற்று" படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் படத்தின் டீசர் குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். "சூரரைப் போற்று படத்தின் டீசருக்காக ஸ்பெஷலான தீம் மியூசிக் ஒன்றை போட்டுள்ளதாகவும், அதன் பெயர் மாரா என்றும், விரைவில் மாரா வெளியாகும்" என்றும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் செம்ம ஹாப்பியான சூர்யா ரசிகர்கள் ஐம் வெயிட்டிங் என காத்துக்கிடக்கின்றனர்.