தமிழ் சினிமாவின் பேவரட் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா 'இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் 2D எண்டர்டைன்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

இதையும் படிங்க: பட ரிலீஸுக்கு முன்னாடியே இப்படியா?... முதல் படத்திலேயே சீயான் மகனுக்கு பெருகும் ஆதரவு... யு-டியூப்பில் கெத்து காட்டும் "ஆதித்யா வர்மா"...!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் பெயர் மாறன் என வைக்கப்பட்டுள்ளது. சூர்யா தனது இரு கைகளையும் விரித்து வானத்தில் பறப்பது போன்று போஸ்டர் வெளியானது. சிம்பிளாக இருந்தாலும் போஸ்டர் செம மாஸ் காட்டியுள்ளதாக சூர்யா ரசிகர்கள் கொண்டாடினர். 

சூர்யாவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக அமையும் என சூரரைப் போற்று படம் எதிர்பார்க்கப்படுகிறது.  திரைப்பிரபலங்கள் பலரும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து வெகுவாக புகழ்ந்தனர். இந்த சமயத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சத்தமே இல்லாமல் சாதனை படைத்து வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை 1 மில்லியன் பேர் ட்வீட் செய்துள்ளனர்.  இதற்கு நன்றி தெரிவித்து 2டி நிறுவனம் சார்பில் டுவிட்டர் பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிடும் படி ரசிகர்கள் சூர்யாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.