நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள 'சூரரை போற்று ' திரைப்படம்,  அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று வெளியிட உள்ளதை சூர்யாவே அறிக்கை வெளியிட்டு, சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: மரத்தில் ஏறி கல்வி பயின்ற மாணவர்கள்..! சொந்த செலவில் போன் டவர் கட்டிக்கொடுத்த சோனு சூட்! வேற லெவல் சார் நீங்க!
 

இதுவரை சூர்யாவின் திரைப்படங்களின் தியேட்டர் உரிமை, 40 முதல் 50 கோடி வரை விற்பனையாகும். ஆனால் தற்போது, அமேசான் பிரைம் ஓடிடி தளம், 'சூரரை போற்று' படத்தை, 70 முதல் 80 கோடி வரை பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இதுவரை இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படம் குறித்து அவ்வப்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று, இந்த படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவியது.

மேலும் செய்திகள்: பாவாடை தாவணியில் பட்டாம் பூச்சி போல் போஸ் கொடுத்த “பாண்டியன் ஸ்டார்” முல்லை..! புகைப்பட தொகுப்பு..!
 

இந்த தகவலுக்கு விளக்கம் அளித்த சூர்யாவின் 2டி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சூரரை போற்று’ குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், தயவு செய்து இந்த படத்தின் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 15 , ஆம் தேதி வெளியாவதாக கூறப்பட்ட சூரரை போற்று படத்தின் ட்ரைலர் குறித்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.