நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள 'சூரரை போற்று ' திரைப்படம், கண்டிப்பாக திரையரங்குகள் திறந்த பிறகு தான் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம், 'சூரரை போற்று' திரைப்படத்தை அமேசான் தளத்தில் வெளியிட உள்ளதாக, அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார் நடிகர் சூர்யா.

அதாவது இதுவரை சூர்யாவின் திரைப்படங்களின் தியேட்டர் உரிமை, 40 முதல் 50 கோடி வரை விற்பனையாகும். அது இல்லாமல், மற்ற மொழிகளில் விற்பனையாவது தனியாக நடிக்கும். ஆனால் தற்போது, அமேசான் பிரைம் ஓடிடி தளம், சூரரை போற்று படத்தை, 70 முதல் 80 கோடி வரை பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இதுவரை இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

மேலும் இது குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டு தெரிவித்த சூர்யா, என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

அதே போல் தன்னலம் பாராமல் கொரோனா யுத்த காலத்தில்' முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ருபாய் பகிர்ந்தளிக்கப்படும், உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும், வாழ்த்தும் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த படம் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளத்தையும் தெரிவித்தார்.

இந்த மாதத்தில் கடைசியில் வெளியாக உள்ள, 'சூரரை போற்று' படத்தின் ட்ரைலர் குறித்து, ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், மிக மிக விரைவில் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்த தகவல் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.